காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படம்.. டைட்டில் வீடியோ ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Thursday,September 14 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் கதாநாயகனாக நடித்த ’நாய்சேகர்’ மற்றும் ’ஓ மை கோஸ்ட்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து அவர் கதாநாயகனாக தற்போது ’வித்தைக்காரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சதீஷ் மீண்டும் நாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’முஸ்தபா முஸ்தபா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பிரவீன் சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும், பிரதீப் என்பவர் தயாரிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சதீஷ் ஜோடியாக மோனிகா நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா தாத்தா, விஜய் டிவி புகழ், மானசா, கருணாகரன், மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோன்ஸ் ரூபர் இசையில், விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது.

More News

மலேசிய விஜய் ரசிகர்களுக்கு ஜாக்பாட்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த 'லியோ' படக்குழு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் தான் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை..! கோலிவுட் ஆச்சரியம்..!

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகிய நான்கு மாஸ் நடிகர்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது  திரை உலகிற்கு வரும் நடிகைகளின் ஆசையாக இருக்கும்.

அமிர்கான் மகனுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை.. வேற லெவல் தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகை அமீர் கானின் மகன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சூர்யா-சுதா கொங்கரா படத்தின் நாயகி இவரா? 10 வருடங்களுக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி..!

சூர்யா மற்றும் சுதா கொங்கரா மீண்டும் இணையும் திரைப்படத்தின் நாயகியாக பத்து வருடத்திற்கு பின் பிரபல நடிகை ஒருவர் ரீஎண்ட்ரி செய்ய இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

திடீரென அப்பா, அம்மாவை சந்தித்த தளபதி விஜய்.. வைரல் புகைப்படம்..!

தளபதி விஜய் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களுடன் சில ஆண்டுகள் பேசாமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தந்தை, தாயை சந்தித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.