காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படம்.. டைட்டில் வீடியோ ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Thursday,September 14 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் கதாநாயகனாக நடித்த ’நாய்சேகர்’ மற்றும் ’ஓ மை கோஸ்ட்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து அவர் கதாநாயகனாக தற்போது ’வித்தைக்காரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சதீஷ் மீண்டும் நாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’முஸ்தபா முஸ்தபா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பிரவீன் சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும், பிரதீப் என்பவர் தயாரிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சதீஷ் ஜோடியாக மோனிகா நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா தாத்தா, விஜய் டிவி புகழ், மானசா, கருணாகரன், மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோன்ஸ் ரூபர் இசையில், விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது.