சன்னிலியோன் - தர்ஷா குப்தாவை ஒப்பிட்ட சதீஷ்:
Send us your feedback to audioarticles@vaarta.com
அவங்க சொல்ல சொன்னாங்க சொன்னேன்: சன்னிலியோன் - தர்ஷா குப்தா சர்ச்சைக்கு விளக்கம் அளித்த சதீஷ்
சமீபத்தில் நிகழ்ந்த ’ஓ மை கோஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சன்னி லியோன், தர்ஷா குப்தா, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் சதீஷ் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது சதீஷ் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சதீஷ் பேசிய போது, ‘மும்பையில் இருந்து வந்திருக்கும் சன்னிலியோன் பட்டுச்சேலை அணிந்து வந்து இருக்காங்க, ஆனால் நம்ம கோயம்புத்தூர் பொண்ணு எப்படி டிரஸ் பண்ணிட்டு வந்திருக்காங்கன்னு பாருங்க என சன்னிலியோன் மற்றும் தர்ஷா உடைகளை ஒப்பிட்டு காமெடியாக பேசினார்.
காமெடியாக சதீஷ் பேசினாலும் ஒரு சிலர் இதை சீரியசாக எடுத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் சதீஷ்க்கு கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பாடகி சின்மயி மற்றும் இயக்குனர் நவீன் ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இயக்குநர் நவீன் இதுகுறித்து கூறும்போது, ‘சன்னி லியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும் கோயம்புத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்தப் பெண்களின் தனிப்பட்ட உரிமை.சதீஷ் சகோதரரே! உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்! மாற்றமே கலாச்சாரம்’ என்று பதிவு செய்துள்ளார். அதேபோல் பாடகி சின்மயில், ‘இது காமெடியாக பேசப்படும் பேச்சு அல்ல என்றும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில் ’இந்த படத்தின் இசை விழாவின் போது தர்ஷா என் அருகே அமர்ந்து இருந்தார். அப்போது சன்னி லியோனை விட நான் மாடலாக டிரஸ் பண்ணிட்டு வந்து இருக்கேன், அவங்க எப்படி வராங்கன்னு பார்ப்போம் என்று கூறினார். அதன்பின் சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர், ‘நான் இப்படி வந்து இருக்கேன், அவங்க அப்படி வந்துருக்காங்க, நான் அப்செட் ஆயிட்டேன், இதை நீங்கள் பேசும்போது சொல்லுங்கள்’ என்று கூறியதாகவும், தர்ஷா சொல்ல சொன்னதால் தான் அதை நான் தெரிவித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. @actorsathish சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்.#மாற்றமேகலாச்சாரம்
— DirectorNaveen (@NaveenFilmmaker) November 10, 2022
pic.twitter.com/FFozk9FHBq
I mean - To actually *point* at a woman and ask for mass heckling of a crowd by a man on a woman who doesn’t dress according to culture.
— Chinmayi Sripaada (@Chinmayi) November 9, 2022
When will this behaviour from men stop?
Its not funny. pic.twitter.com/HIoC0LM8cM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout