ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'குக் விக் கோமாளி' பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’பிகில்’ திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகன் நடிக்க உள்ளார். இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் யூட்யூப் வீடியோவை தயாரித்து இயக்கியவர் என்பதும் இவர் இயக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த படத்தின் நாயகியாக ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்க உள்ளார். பிரவீன் ஒளிப்பதிவில் அஜீஸ் அசோக் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதும், அதேபோல் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஹர்பஜன் சிங் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
#AgsEntertainment is happy to announce our next film @Ags_production #21
— Archana Kalpathi (@archanakalpathi) April 7, 2021
#KalpathiAghoram#KalpathiGanesh #KalpathiSuresh @aishkalpathi @actorsathish @itspavitralaksh @KishoreRajkumar @venkat_manickam @ajesh_ashok @praveenzaiyan @Ram_Pandian_90#MGMurugan @onlynikil pic.twitter.com/oiGMRS7NSD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com