பிக்பாஸ் வீட்டில் இருந்து ரம்யா வெளியேற்றம்: கோலிவுட் பிரமுகர்கள் அதிருப்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாம் ஏற்கனவே கூறியவாறு ரம்யா நேற்று வெளியேற்றப்பட்டார். முதலில் எவிக்சன் பட்டியலிலேயே இல்லாத ரம்யா, தலைவராக தனது கடமையை சரிவர செய்யாததால் எவிக்சன் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் எவிக்சன் பட்டியலில் உள்ளவர்களில் ஐஸ்வர்யாவுக்கு தான் குறைவான வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டது. ஆனால் ரசிகர்களின் வாக்குகளுக்கு எதிராக நேற்று ரம்யா வெளியேற்றப்பட்டார். இதேபோல் தான் கடந்த வாரம் யாஷிகாவும் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
பிக்பாஸ் வீட்டில் யார் வெளியேற வேண்டும் என்ற முடிவை இனிமேல் பிக்பாஸே எடுப்பது நல்லது. ஏன் தேவையில்லாமல் வாக்கெடுப்பு நடத்தி பார்வையாளர்களின் நேரத்தை வேஸ்ட் செய்ய வேண்டும்? எப்படியும் வாக்குகளின்படி எவிக்சன் நடைபெறபோவதில்லை என்பதால் இனிவரும் காலங்களில் நேரடியாக பிக்பாஸே யாரை வெளியேற்றுவது என்பதை முடிவெடுக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இந்த வாரம் ரம்யா வெளியேறியதற்கு ஏராளமான பார்வையாளர்கள் சமூக வலைத்தளத்தில் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் குறித்து அவ்வப்போது கருத்துக்களை கூறி வரும் நடிகர் சதீஷ், 'நானும் எல்லோரையும் போல் ஐஸ்வர்யாதான் வெளியேறுவார் என்று நினைத்தேன். ஆனால் ரம்யா போய்விட்டார். அவர் புறம் பேசவில்லை, நெகட்டிவ்வாக எதுவும் கூறவில்லை' என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளார். அதேபோல் பாடகர் க்ரிஷ் தனது சமூகவலைத்தளத்தில், 'நியாயமாக இருந்தால் சில சமயம் அதுவும் தோற்று போகும்' என்று கூறியுள்ளார்.
இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் இருந்தாலும் அவர்கள் இருவரும் வெளியேற வாய்ப்பே இல்லை என்பதால் பார்வையாளர்கள் இனிமேல் ஓட்டு போடுவதை தவிர்ப்பதே நல்லது.;
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com