நீங்க கூப்பிட்ட உடனே வர முடியாது! இயக்குனருக்கு அதிரடி பதிலளித்த சதீஷ்

  • IndiaGlitz, [Wednesday,January 10 2018]

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கி வரும் 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் படப்பிடிப்பிற்கு அனைவரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்ட நிலையில் சதீஷ் மட்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை என தெரிகிறது.

உடனே இயக்குனர் அமுதன் தனது டுவிட்டரின் மூலம் சதீஷுக்கு டுவீட் போட்டு படப்பிடிப்புக்கு உடனே வருமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த சதீஷ், அப்படியெல்லாம் உடனே வந்துட முடியாது சார், நிறைய கெட்டப் இருக்கு, ரெடி ஆகிட்டுத்தான் வர முடியும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த அமுதன், 'இதுக்குத்தான் ஆர்ஜே பாலாஜியை போடலாம்னு சொன்னேன்' என்றுகூற ,அதற்கு சதீஷ், 'சரி ஓகே போட்டுக்கோங்க, நான் வெங்கட்பிரபு படத்துல போய் நடிச்சிக்கிறேன்' என்று கூறினார்.

இந்த நிலையில் நடிகர் ஆர்யா திடீரென குறுக்கே வந்து, '12 கெட்டப்புக்கு டைம் ஆகும்ப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' என்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் தனது டுவிட்டரில், 'சதீஷ் தம்பி ப்ளீஸ் வாங்க, எல்லோரும் வெயிட்டிங்' என்று கூற இத்துடன் இந்த பிரச்சனை முடிந்ததாக தெரிகிறது.

 

More News

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' முன்னோட்டம்:

சூர்யாவின் திரைப்படங்கள் என்றால் தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். இந்த முறை கேரளாவில் உள்ள சூர்யா ரசிகர்களும் ஆவலுடன் அவர் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்

பாலாவின் 'நாச்சியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வந்த 'நாச்சியார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

பொங்கல் தினத்தில் வெளியாகும் படங்கள் எத்தனை?

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' விக்ரமின் ஸ்கெட்ச், அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', பிரபுதேவாவின் 'குலேபகாவலி',

நாம் செய்யும் முதல் தவறு இதுதான்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை

கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கான உடல்பருமன் தடுப்புத் திட்டம் குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடந்தது.

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்: ரஜினியின் அரசியலுக்கு ஜப்பான் ரசிகர்கள் ஆதரவு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'முத்து' படத்தில் இருந்து அவர் நடித்த அனைத்து படங்களும் ஜப்பானில் ஹிட்டானது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தை போலவே அவருக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் தோன்றியது.