நீங்கள் குழந்தை பெற்று கொள்ள வேண்டாம்: பிரபல நடிகரின் மனைவிக்கு அறிவுரை கூறிய சத்குரு
Send us your feedback to audioarticles@vaarta.com
நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்ற முடிவை எடுத்தால் நான் உங்களுக்கு விருது கொடுப்பேன் என்றும் குழந்தை பெற்றுக் கொள்ள தகுதி இருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவை எடுத்தால் அதை நான் பாராட்டுவேன் என்றும் பிரபல நடிகரின் மனைவிக்கு சத்குரு அறிவுரை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் மிக சிறப்பாக நடித்த ராம்சரண் தேஜாவின் மனைவி உபாசனா தொழிலதிபராகவும் உள்ளார் என்பது தெரிந்ததே. ராம்சரண் - உபாசனா திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்ட உபாசனா, ‘நானும் என் கணவரும் 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாதது குறித்து எங்கள் உறவினர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள் என்றும் எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை என்றும் எங்களுக்கும் சில இலக்கு இருக்கிறது என்றும் கூறினார்.
அதற்கு பதிலளித்த சத்குரு, ’நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்தால் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் குழந்தை பெற தகுதி இருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுப்பவர்களை நான் பாராட்டுகிறேன் என்று கூறினார்.
உலக மக்கள் தொகை தற்போது 10 பில்லியனை நெருங்கி வரும் நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்ல முடிவு என்றும் தற்போது மனித இனம் ஒன்றும் அழிவின் விளிம்பில் இல்லை என்பதால் குழந்தை பெற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே நடிகர் ராம்சரண் தேஜா பேட்டி ஒன்றில் எனக்கும் எனது மனைவிக்கும் ஒரு சில இலக்குகள் உள்ளன என்றும் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த இலக்கில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com