சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இந்த மரணம் குறித்து முதலில் சிபிசிஐடி அதன்பிறகு சிபிஐ விசாரணை செய்து வந்தனர். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் மொத்தம் 10 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை என்பது குறிப்பிடத்தக்கது. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பால்துரை கடந்த சில நாட்களாக சிறையில் இருந்த நிலையில் திடீரென அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரை கொரோனாவால் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

கண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி

கணவர் இறந்துவிட்டதாக கருதி அவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு கணவர் கண் முன்னே வந்து நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா?

சமீபத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரை இறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளானது என்பது தெரிந்ததே. இந்த விமான விபத்தில் கேப்டன் டிவி சாதே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார்

16 வயது சிறுமிக்கு ஆபாச படம் போட்டுக் காட்டிய பெண் பாய்பிரண்டுடன் கைது

புனே அருகே ஒரு பெண் தனது 16 வயது மகளை தனது உறவினர் பெண் வீட்டில் ஊரடங்கு நேரத்தில் விட்டு சென்று உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் விட்டுச்சென்ற அந்த பெண்

ரஷ்ய நதியில் மூழ்கி 4 தமிழக மாணவர்கள் பலி: ஒருவர் சென்னை மாணவர் என தகவல்

தமிழகத்தில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் அங்குள்ள ஒரு நதியில் மூழ்கி உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்: விஜய் சேதுபதிக்கு இரண்டாவது இடம்தான் 

800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழில் உருவாக உள்ளது என்பது தெரிந்ததே.