ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறக்கவில்லை: பொய் கூறிய போலீஸ் அதிகாரியின் வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்து வைத்ததாக கூறி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் விசாரணையின் போது அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த செய்தி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் என்பவர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் இருவருக்கும் எதுவும் ஆகவில்லை என்றும் அவர்கள் நன்றாக இருப்பதற்கு நான் கியாரண்டி என்றும் கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கூறிய நேரத்தில் ஏற்கனவே ஜெயராஜ் அவர்கள் இறந்து விட்டதாகவும் பென்னிக்ஸ் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் பின்னர் தெரியவந்தது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் அடித்து கொடுமைப்படுத்தப்பட்டு அவர்கள் மரணத்திற்கும் காரணமான இந்த கொடூர சம்பவம் குறித்து அதன் பின்னர் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
போலீசார் உண்மையை மறைப்பதற்காக இருவரும் உயிரிழக்கவில்லை என்று பொய் கூறிய இந்த வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் மருத்துவமனை மருத்துவர்கள், சிறை அதிகாரிகள், மாஜிஸ்ட்ரேட் உள்பட பலரும் போலீசை காப்பாற்றவே முயற்சி செய்து உள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments