ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறக்கவில்லை: பொய் கூறிய போலீஸ் அதிகாரியின் வீடியோ வைரல்

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்து வைத்ததாக கூறி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் விசாரணையின் போது அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த செய்தி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் என்பவர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் இருவருக்கும் எதுவும் ஆகவில்லை என்றும் அவர்கள் நன்றாக இருப்பதற்கு நான் கியாரண்டி என்றும் கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கூறிய நேரத்தில் ஏற்கனவே ஜெயராஜ் அவர்கள் இறந்து விட்டதாகவும் பென்னிக்ஸ் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் பின்னர் தெரியவந்தது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் அடித்து கொடுமைப்படுத்தப்பட்டு அவர்கள் மரணத்திற்கும் காரணமான இந்த கொடூர சம்பவம் குறித்து அதன் பின்னர் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

போலீசார் உண்மையை மறைப்பதற்காக இருவரும் உயிரிழக்கவில்லை என்று பொய் கூறிய இந்த வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் மருத்துவமனை மருத்துவர்கள், சிறை அதிகாரிகள், மாஜிஸ்ட்ரேட் உள்பட பலரும் போலீசை காப்பாற்றவே முயற்சி செய்து உள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
 

More News

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் மரணம்: தஞ்சையில் பரபரப்பு

கொரோனா வைரசால் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் 50க்கும் அதிகமானோர் பலியாகி வருவதாகவும் உள்ள செய்திகளை

வன்முறையால்‌ ஒருபோதும்‌ மக்களின்‌ மனதை வெல்ல முடியாது: சாத்தான்குளம் விவகாரம் குறித்து சூர்யா அறிக்கை

சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகிய தந்தை-மகன், காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் மர்ம மரணம்

'தல' பிறந்த நாள் டிபியை வெளியிட்ட வரலட்சுமி: குவியும் பாராட்டுக்கள்

கடந்த சில வருடங்களாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பிறந்த நாள் வரும்போது டிபி என்ற வாழ்த்து புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

சிதம்பரம் ரகசியம் என்றால் என்ன??? வரலாற்றில் ஒளிந்து கிடக்கும் அரிய தகவல்கள்!!!

நம்முடைய தமிழர் பண்பாட்டில் ஒரு வழக்கம் உண்டு. எதை ஒளித்து வைத்தாலும் அதற்கு பெயர் சிதம்பர ரகசியம். அப்படி என்னதான் இருக்கிறது அந்த சிதம்பரத்தில்? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

கணவர் கொடுமையால் தற்கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் தனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்திய