தூத்துக்குடி டிஎஸ்பி, ஏடிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: நீதிமன்றத்தின் அதிரடியால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பாக விசாரணை செய்த மாஜிஸ்திரேட் ஒருவரை ஒருமையில் மரியாதைக்குரிய வகையில் பேசியதாக சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சாத்தான்குளம் ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மீது நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற செய்தியை பார்த்தோம். மேலும் சாத்தான்குளம் டிஎஸ்பி மற்றும் ஏடிஎஸ்பி ஆகிய இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கையை அடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்
தகவல்கள் வெளிவந்துள்ளது.
நேற்று தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகிய இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்பது நீதிமன்றத்தை விட அதிகாரம் உடையது வேறு எதுவும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாத்தான்குளம் லாக்கப் மரணம் குறித்த வழக்கு சிபிஐக்கு மாற்றுவதற்கு நேற்று தமிழக அரசு அரசாணை விதித்துள்ளது என்பதும் இந்த வழக்கு சிபிஐக்கு செல்லவிருப்பதால் குற்றவாளிகள் அனைவரும் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout