சாத்தான்குளம் வழக்கில் மேலும் இருவர் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி

  • IndiaGlitz, [Thursday,July 02 2020]

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அடித்தே கொலை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று இரவு சாத்தான்குளம் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஹேமா அவர்கள் உத்தரவிட்டார். மேலும் வரும் 16ஆம் தேதி அவரை மீண்டும் ஆஜர்படுத்தப் அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சாத்தான்குளம் இன்னொரு எஸ்ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருப்பதாகவும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய இருவரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜும் கைது என தகவல் வெளிவந்துள்ளது. இன்று கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் தீவிர முயற்சிக்குப் பின்னர் சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

சாத்தான்குளம் இரட்டை மரணம் வழக்கில் மொத்தம் ஆறு பேர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 2 பேர்கள் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாத்தான்குளம் வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை தொடர்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகுகணேஷ் கைது: கொலை வழக்காக பதிவு

தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர்களின் லாக்கப் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

உங்க உடம்புல செல்போனை வைக்கக் கூடாத 10 ஆபத்தான இடங்கள் பற்றி தெரியுமா???

மனிதர்களின் ஆறாம் விரலாக மாறிவிட்ட செல்போன் இல்லாத மனிதரைத் தேடித்தான் பிடிக்க வேண்டும் என்ற நிலைமைக்குத் மனித சமூக தள்ளப்பட்டு இருக்கிறது.

'துளி கூட நல்லவன் கிடையாது': 'மாஸ்டர்' கேரக்டர் குறித்து மனம் திறந்த விஜய்சேதுபதி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்தவுடன் திரை அரங்குகள் திறந்த உடன் வெளியாகும்

திடீரென காலியான பிரதமர் மோடியின் 'வெய்போ' அக்கவுண்ட்: என்ன காரணம்?

சீனாவின் 'வெய்போ' என்ற சமூக வலைதளம் டுவிட்டருக்கு இணையானது என்பதால் அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தனது அக்கவுண்ட்டை தொடங்கினார்.

டிக்டாக் தடை குறித்து இலக்கியாவின் அதிரடி கருத்து!

டிக் டாக்கில் புகழ் பெற்ற இலக்கியா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாச பதிவுகளை டிக்டாக்கில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது தெரிந்ததே.