சாத்தான்குளம் வழக்கில் மேலும் இருவர் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அடித்தே கொலை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று இரவு சாத்தான்குளம் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஹேமா அவர்கள் உத்தரவிட்டார். மேலும் வரும் 16ஆம் தேதி அவரை மீண்டும் ஆஜர்படுத்தப் அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சாத்தான்குளம் இன்னொரு எஸ்ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருப்பதாகவும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய இருவரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜும் கைது என தகவல் வெளிவந்துள்ளது. இன்று கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் தீவிர முயற்சிக்குப் பின்னர் சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
சாத்தான்குளம் இரட்டை மரணம் வழக்கில் மொத்தம் ஆறு பேர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 2 பேர்கள் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாத்தான்குளம் வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை தொடர்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout