சசிகுமாரின் 'வெற்றிவேல்' திரைமுன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'தாரை தப்பட்டை' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அவருடைய வழக்கமான பாணி படமான காதலை சேர்த்து வைக்கும் கதையம்சம் கொண்ட 'வெற்றிவேல்' திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது.
காதல், மோதல், கிராமத்து பின்னணி, நண்பர்கள் என சசிகுமாரின் வெற்றி பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை வசந்தமணி இயக்கியுள்ளார். முதன்முதலாக சசிகுமாருக்கு ஜோடி சேர்ந்துள்ள பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ், ஏற்கனவே அமரகாவியம், 'இன்று நேற்று நாளை', போன்ற தமிழ்ப்படங்களில் நடித்தவர். மேலும் இந்த படத்தில் இளையதிலகம் பிரபு, சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ரேணுகா, இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையில் சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்கள் நல்ல ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக 'உன்னைபோல' என்ற ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல் அனைத்து எப்.எம்.களிலும் தினந்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. கதிர் ஒளிப்பதிவில், ரமேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை Trident arts என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலிஸ் உரிமையை லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதால் இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வசந்தமணி நேற்று அளித்த பேட்டியில் சசிகுமார் தன்னுடைய பெஸ்ட் நடிப்பை இந்த படத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை ரசிகர்கள் திரையில் பார்க்கும்போது உணர்வார்கள். 'வெற்றிவேல்' ஒரு குடும்பப்படம் என்றும் குடும்பத்தின் மூத்தவரான சசிகுமார் இளையவர்களுக்காக செய்யும் தியாகமே படத்தின் கரு என்றும் அவர் கூறியுள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை நாளைய திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments