close
Choose your channels

சசிகுமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் இயக்குனர் எம்.சசிகுமார் நடித்த 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, அவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வசந்தமணி இயக்கும் இந்த படத்தில் எம்.சசிகுமார் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கின்றார். இந்த படத்திற்கு 'வெற்றிவேல்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. எம்.சசிகுமாருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜீ மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவிந்த்ரன் தயாரிக்கும் இந்த படத்தை ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்த்ரன் தயாரிக்கின்றார். SR. கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். தஞ்சாவுரில் இப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது. சசிகுமாரின் முந்தைய படமான 'தாரை தப்பட்டை' திரைப்படமும் தஞ்சாவூரில்தான் படப்பிடிப்பு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சசிகுமாரின் தாரை தப்பட்டை' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை 'கத்தி' படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'லைகா புரடொக்ஷன்' ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment