close
Choose your channels

ரஜினி-கமலுடன் இணைந்த சசிகுமார்

Tuesday, February 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாரை தப்பட்டை படத்திற்கு பின்னர் குறுகிய காலத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு முடிந்த சசிகுமார் திரைப்படம் 'வெற்றிவேல்'. இந்த படத்தில் மீண்டும் சசிகுமார் தனது நட்பு பாதைக்கு திரும்பியுள்ளார். சசிகுமாருக்கு ஜோடியாக 'இன்று நேற்று நாளை' நாயகி மியா ஜார்ஜ் நடித்துள்ள இந்த படத்தில் இளையதிலகம் பிரபு, சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ரேணுகா உள்பட பலர் நடித்துள்ளனர்.


இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளீவந்துள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் வாரத்திலும், வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் இந்த படத்தின் ரிலீஸூம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே லைகா நிறுவனம் ரஜினியின் 2.0, ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு, விஜய் ஆண்டனியின் எமன் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. மேலும் கமல்ஹாசன் தனது மகளுடன் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் அவருடைய கனவுப்படமான 'மருதநாயகம்' படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகுமார் படத்தின் ரிலீஸ் உரிமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'வெற்றிவேல்' படத்தை வசந்தமணி என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment