விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என நினைக்கிறேன்: சசிகுமார்

  • IndiaGlitz, [Friday,September 13 2024]

நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் ’தளபதி 69’ என்று கூறப்படும் நிலையில் இன்று மாலை இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் சினிமாவில் இருந்து விஜய் ஓய்வு பெற மாட்டார் என்று நினைக்கிறேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் தற்போது ’நந்தன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக பல பேட்டிகள் அளித்து வருகிறார். ரா. சரவணன் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் ஸ்ருதி பெரியசாமி நாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் சசிகுமார் ’அடுத்து நடிக்க இருக்கும் ஒரு படத்துடன் விஜய் ஓய்வு பெறக்கூடாது என நான் நினைக்கிறேன், அரசியலில் இருந்தும் அடிக்கடி படம் நடிக்கலாம், விஜய் ஓய்வு பெற மாட்டார் என்று என்னுடைய கணிப்பு’ என்று கூறியுள்ளார்.

மேலும் ’ஈசன்’ படத்துக்கு பிறகு விஜய் இடம் தான் ஒரு கதையை கூறியதாகவும் 2015 ஆம் ஆண்டில் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இதுவொரு வரலாற்று திரைப்படத்தின் கதை என்றும் சசிகுமார் கூறினார். விஜய்க்கு இந்த கதை பிடித்திருந்ததால், அவரே தயாரிப்பாளரையும் காட்டினார். ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் அந்த படம் கைவிடப்பட்டது என்று சசிகுமார் கூறியுள்ளார்.

More News

தமிழ் நடிகைகள் குறித்து இழிவான பேச்சு.. டாக்டர் காந்தாராஜ் மீது ரோகிணி புகார்..!

தமிழ் நடிகைகள் குறித்து இழிவாக பேசிய டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ரோகிணி புகார் ஒன்றை அளித்துள்ளார்

ஜெயம் ரவியின் 'பிரதர்'.. இசை , டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி வந்த 'பிரதர்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும்

ஸ்டார் விஜய் பிளாக்பஸ்டர் கேம் ஷோ 'கம்பெனி': ஒளிபரப்பாகும் தேதி, நேரம் அறிவிப்பு..!

ஸ்டார் விஜய் 'கம்பெனி' என்ற தலைப்பில் புதுமையான கேம் ஷோவை தொடங்கவுள்ளது .   இந்த புதிய கேம் ஷோ 15 செப்டம்பர் 2024 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

'தளபதி 69' படத்தின் அறிவிப்பு.. மாஸ் வீடியோ வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனமான KVN புரடொக்சன்ஸ்

விஜய் டிவி, சன் டிவிக்கு போட்டியாக ஜீ டிவியில் ஒரு சமையல் நிகழ்ச்சி.. தொகுத்து வழங்கும் பிரபல நடிகை..!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' என்ற சமையல் காமெடி நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்து தற்போது 5வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த சீசனில் சில மாற்றங்கள்