close
Choose your channels

சசிகுமாரின் அடுத்த பட தலைப்பு மற்றும் முக்கிய விவரங்கள்

Friday, September 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிடாரி வெற்றி படத்தை அடுத்து சசிகுமார் நடித்து தயாரிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கவுள்ளார் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இவர் பாலா மற்றும் 'இறுதிச்சுற்று' சுதா ஆகியோர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த படத்திற்கு 'அலப்பற' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
சசிகுமார் நடிக்கும் மற்றொரு கிராமிய கதையம்சம் உள்ள இந்த படத்தில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் சங்கிலிமுருகன், ரோஹினி மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்திற்கு 'கிடாரி' இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரவீந்திரநாத் ஒலிப்பதிவில், ப்ரவீண் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் சசிகுமாரின் கம்பெனி புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment