'விடுதலை' இன்னொரு வெர்ஷனில் சசிகுமார்.. கிளிம்ப்ஸ் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "விடுதலை" திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இதே டைட்டில் ஆனால் ஆங்கிலத்தில் ’Freedon’ என்ற பெயரில் சசிகுமார் நடித்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சசிகுமார் நடித்த "நந்தன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், தற்போது அவர் சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் ’Freedon’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். "கழுகு", "சவாலே சமாளி", "1945" போன்ற படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
நேற்று சசிகுமார் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த படத்தின் கதை தவறே செய்யாமல் இலங்கை சிறையில் அகதியாக சிக்கிக்கொண்ட இருவர் எப்படி தப்பிக்கின்றனர் என கூறப்படுகிறது.
’Freedon’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. சசிகுமாருக்கு இந்த படம் இன்னொரு வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Team #Freedom Wishing happy birthday to our Hero @SasikumarDir Sir
— Ghibran Vaibodha (@GhibranVaibodha) September 28, 2024
Directed by @Sathyasivadir
Produced by @vijayganapathys @PandiyanParasu @jose_lijomol #CUdhayakumar @DirectorBose @nsuthay @MalavikaBJP @Arunbharathi_A #NBSrikanth @KavingarSnekan @trendmusicsouth @teamaimpr… pic.twitter.com/5qRCrFRKO8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments