'விடுதலை' இன்னொரு வெர்ஷனில் சசிகுமார்.. கிளிம்ப்ஸ் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,September 30 2024]

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இதே டைட்டில் ஆனால் ஆங்கிலத்தில் ’Freedon’ என்ற பெயரில் சசிகுமார் நடித்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சசிகுமார் நடித்த நந்தன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், தற்போது அவர் சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் ’Freedon’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். கழுகு, சவாலே சமாளி, 1945 போன்ற படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

நேற்று சசிகுமார் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த படத்தின் கதை தவறே செய்யாமல் இலங்கை சிறையில் அகதியாக சிக்கிக்கொண்ட இருவர் எப்படி தப்பிக்கின்றனர் என கூறப்படுகிறது.

’Freedon’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. சசிகுமாருக்கு இந்த படம் இன்னொரு வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ட்விட்டரில் ஒன்னுமே இல்லையே..! துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தாரா ரஜினிகாந்த்?

தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும்

விஜய்யின் 'தளபதி 69' படத்தின் கதை இதுவா? தேர்தல் நேரத்தில் சரியான கதை தான்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்கவிருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு முடிந்த பிறகு தொடங்கும் என்று

அட்லியின் 6வது படம்.. ஒரே படத்தில் 3 பிரபலங்களா?

இயக்குனர் அட்லியின் 6வது திரைப்படத்தில் மூன்று பிரபலங்கள் இணைய இருப்பதாகவும், கிட்டத்தட்ட இந்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

'டாப் குக்கு டூப் குக்கு' டைட்டில் வின்னர் யார்? 2ஆம் இடம், 3ஆம் இடம் யாருக்கு?

சன் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பான 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சி இன்று முடிவடைந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்தவர்கள்

அனுஷ்கா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. உறுதி செய்த இயக்குனர்..!

அனுஷ்கா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளதை அடுத்து, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.