கிடாரி'யை அடுத்து சசிகுமாரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,September 15 2016]

சசிகுமார், நிகிலா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'கிடாரி' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சசிகுமாரின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சசிகுமாரின் இந்த படத்தையும் அவரது 'கம்பெனி புரடொக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் 'கிடாரி' படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகி விமர்சகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்ற தர்புகா சிவா, சசிகுமாரின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
ரவீந்தரநாத் குரு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் டைட்டில், ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது.