close
Choose your channels

வயநாடு நிலச்சரிவு.. நிவாரண பணிக்கு களத்தில் இறங்கிய சசிகுமார் பட நாயகி..!

Wednesday, July 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரள மாநிலம் வயநாடு அருகே திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில் பல தன்னார்வ தொண்டர்கள் தற்போது நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் நடிகை ஒருவரும் நிவாரண பணியில் களத்தில் இறங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள மூன்று கிராமங்களில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 170க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் தோண்டத் தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருப்பதாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல தன்னார்வ அமைப்புகளும் நிவாரண பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை அனுப்பும் பணியில் நடிகை நிகிலா விமல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை விமலா விமல், சசிகுமார் நடித்த ’வெற்றிவேல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, அதன் பிறகு ’கிடாரி’ ’பஞ்சுமிட்டாய்’ ’தம்பி ’ ‘ரங்கா’ ’போர் தொழில்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ’வாழை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment