அக்டோபர் 1ல் ரிலீஸாகும் சசிகுமாரின் அடுத்த படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் இயக்குனருமான சசிகுமார் தற்போது ஒரே நேரத்தில் சுமார் 6 படங்களுக்கு மேலாக நடித்து வருகிறார் என்பதும், அவற்றில் ஒரு சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சசிகுமார் நடித்து முடித்து திரைக்கு தயாராக உள்ள திரைப்படங்களில் ஒன்று ’ராஜவம்சம்’. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ள இந்த படத்தை கதிர்வேல் என்பவர் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும், இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
After the "Mega Blockbuster hit" of @vijayantony's #KodiyilOruvan, it’s time for the next packed wholesome family entertainer.@SasikumarDir @nikkigalrani Starring #Raajavamsam releasing on OCTOBER 1, In theatres. @Kvkathirvelu @td_rajha @ChendurFilm#RaajavamsamFromOct1 pic.twitter.com/ojGSpNEk1S
— Diamond Babu (@idiamondbabu) September 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments