சசிகுமாரின் 'கொம்பு வச்ச சிங்கம்' லேட்டஸ்ட் அப்டேட்!

  • IndiaGlitz, [Friday,May 10 2019]

சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு 'அசுரவதம்', இந்த ஆண்டு 'பேட்ட' ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'நாடோடிகள் 2' மற்றும் 'கென்னடி கிளப்' படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது 'கொம்பு வச்ச சிங்கம்' படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பின் இறுதி நாளன்று எடுக்கப்பட்ட குரூப் போட்டோகளையும் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்துள்ளனர்.

'கொம்பு வச்ச சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை அடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது. 'கொம்பு வச்ச சிங்கம்' படம் உள்பட சசிகுமாரின் மூன்று படங்களும் அடுத்தடுத்து இவ்வாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமார், மடோனா செபாஸ்டியன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'சுந்தரபாண்டியன்,' இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்' போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவில், டான் போஸ்கோ படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரேதான் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.