சசிகுமாரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுத்துவிடுவேன்: ஒரு விவசாயியின் தன்னம்பிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். தங்கள் நிலத்தில் விளைந்த பயிர்களை கூட அவர்களால் அறுவடை செய்யக் கூட முடியாமல் பலர் தத்தளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் துபாயில் பணிபுரிந்த தமிழகத்தின் கோவில் நகரமான மதுரை மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற விவசாயி, வெளிநாட்டு வாழ்க்கையை உதறி விட்டு தாயகம் திரும்பி தன்னுடைய 3.5 ஏக்கர் நிலத்தில் வாழை பயிர் செய்தார். அவர் எதிர்பார்த்தது போலவே வாழை நன்றாக வளர்ந்து பருவம் வந்து, வாழைத்தார்கள் அறுவடை செய்யும் நேரத்தில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாழைத்தார்களை வெட்டுவதற்கு வழி இல்லாமல் இருந்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தனக்கு யாராவது தயவுசெய்து உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த தகவல் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்களுக்கு தெரிய வந்தவுடன் வாழை அறுவடை செய்ய உதவியாக ரூபாய் 25 ஆயிரம் பண உதவி செய்துள்ளார். இந்த உதவியை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அந்த விவசாயி, நடிகர் சசிகுமார் அவர்களிடம் இந்த உதவியை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட விவசாயி கோபாலகிருஷ்ணன், இந்த உதவியை தான் கடனாக மட்டுமே பெற்று கொள்வதாகவும், இந்த பணத்தை அடுத்த சாகுபடியில் நிச்சயம் சசிகுமாரிடம் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இந்த விவசாயின் நல்ல மனதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்
வாழை அறுவடைக்கு வழியின்றி சிரமப்பட்ட இந்த விவசாயிக்கு 25,000 பண உதவி செய்திருக்கிறார் நடிகர் சசிகுமார். “சசி சார் உதவியா கொடுத்தாலும் அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன்” என்கிறார் விவசாயி கோபாலகிருஷ்ணன். நல்ல மனம் வாழ்க @SasikumarDir https://t.co/EqaezfCfPg
— இரா.சரவணன் (@erasaravanan) May 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments