'உட்தா பஞ்சாப்' படத்தின் வெற்றி எங்கள் வெற்றி : சசிகுமார்

  • IndiaGlitz, [Wednesday,June 15 2016]

இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஷாஹித் கபூர், கரீனா கபூர் நடித்த 'உட்தா பஞ்சாப்' படத்திற்கு சென்சார் போர்டு செய்த கெடுபிடிகள், அதனை அடுத்து மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட பரபரப்பு ஆகியவற்றை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் 'உட்தா பஞ்சாப்' பட இயக்குனர் அனுராக் காஷ்யாப் அவர்களுக்கு தணிக்கை வாரியத்துக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த வெற்றி எங்களுக்கும் உரித்தானது என்று பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பூனைக்கு யார் மணி கட்டுவது என்று அனைவரும் தயங்கிக்கொண்டிருந்த நிலையில் 'உட்தா பஞ்சாப்' படக்குழுவினர் தைரியமாக சென்சார் போர்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வெற்றியும் பெற்றுள்ளதால் இந்த வெற்றியை படக்குழுவினர் மட்டுமின்றி இந்திய திரையுலகினர் அனைவருமே கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'முத்தின கத்தரிக்கா' திரை முன்னோட்டம்

பிரபல இயக்குனர் சுந்தர் சி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களை இயக்குவதில் மட்டும் முழு கவனத்தை செலுத்தி வந்தார்...

இன்று ரஜினியின் '2.0' படத்திற்கு 100வது நாள்? எப்படி தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில்...

'கபாலி' நடிகைக்கு கிடைத்த 'ராணி' வாய்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தன்ஷிகா நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே...

6500 திரையரங்குகளில் மீண்டும் பாகுபலி. ரூ.1000 கோடி வசூலை நெருங்குமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது...

'கபாலி'யின் 'நெருப்புடா' பாடலுக்கு இளையதளபதியின் ரியாக்ஷன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் பாடல்கள் கடந்த ஞாயிறு அன்று வெளியாகி 'நெருப்புடா' உள்ளிட்ட...