close
Choose your channels

சசிகுமாரின் அடுத்த பட அட்டகாசமான டைட்டில்

Wednesday, November 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் தயாரித்து நடித்த 'கிடாரி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் புதிய பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சசிகுமாரின் 'கம்பெனி புரொடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு 'பலே வெள்ளைத்தேவா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் சிவாஜி கணேசன் நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் இடம்பெறும் புகழ் பெற்ற வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கவுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கோவை சரளா, சங்கிலிமுருகன் உள்பட பலர் நடிக்கின்றனர்.
'கிடாரி' படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா இந்த படத்திற்கும் இசையமைக்கின்றார். இதுவரை ஆக்சன் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திய சசிகுமார் இந்த படத்தின் மூலம் காமெடி களத்தில் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment