சசிகுமாரின் அடுத்த பட அட்டகாசமான டைட்டில்

  • IndiaGlitz, [Wednesday,November 02 2016]

சசிகுமார் தயாரித்து நடித்த 'கிடாரி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் புதிய பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சசிகுமாரின் 'கம்பெனி புரொடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு 'பலே வெள்ளைத்தேவா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் சிவாஜி கணேசன் நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் இடம்பெறும் புகழ் பெற்ற வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கவுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கோவை சரளா, சங்கிலிமுருகன் உள்பட பலர் நடிக்கின்றனர்.
'கிடாரி' படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா இந்த படத்திற்கும் இசையமைக்கின்றார். இதுவரை ஆக்சன் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திய சசிகுமார் இந்த படத்தின் மூலம் காமெடி களத்தில் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல இளம் இசையமைப்பாளருக்கு திருமணம்.

மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் சூர்யாவின் 'பசங்க 2'...

தனுஷ்-செளந்தர்யா ரஜினி படத்தில் 2 பிரபல நாயகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் திரைப்படமான 'கோச்சடையான்'...

இந்த உலகின் அதிர்ஷ்டக்கார தந்தை நான் தான். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் வாழ்ந்த கவுதமி, நேற்று பிரிவதாக வெளியான அறிவிப்பு...

ஜெயம் ரவியின் 'போகன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி, அரவிந்தசாமி நடித்த 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து மீண்டும்...

விஜய்சேதுபதி-சமந்தா படத்தில் இணையும் இந்திய பிரபலம்

'ஆரண்ய காண்டம்' என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவின்...