ஒரு டீ குடிக்கிறீங்களா சார்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' டீசர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சசிகுமார் மற்றும் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடிக்கும் ’டூரிஸ்ட் பேமிலி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுமார் 4 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த டீசரில் சசிகுமார் மற்றும் சிம்ரன் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு போக முடிவு செய்யும் போது ஏற்படும் கலாட்டாக்கள், காமெடிகள், பக்கத்து வீட்டில் இருந்து வரும் நண்பர் மற்றும் சில நபர்கள் என காமெடியின் உச்சத்தில் இந்த படம் இருக்கும் என டீசரில் இருந்து தெரிகிறது.
சசிகுமார் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். அபிஷான் ஜீவின் என்பவர் இயக்கத்தில் அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout