ஒரு டீ குடிக்கிறீங்களா சார்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' டீசர்..!

  • IndiaGlitz, [Saturday,December 07 2024]

சசிகுமார் மற்றும் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடிக்கும் ’டூரிஸ்ட் பேமிலி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுமார் 4 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த டீசரில் சசிகுமார் மற்றும் சிம்ரன் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு போக முடிவு செய்யும் போது ஏற்படும் கலாட்டாக்கள், காமெடிகள், பக்கத்து வீட்டில் இருந்து வரும் நண்பர் மற்றும் சில நபர்கள் என காமெடியின் உச்சத்தில் இந்த படம் இருக்கும் என டீசரில் இருந்து தெரிகிறது.

சசிகுமார் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். அபிஷான் ஜீவின் என்பவர் இயக்கத்தில் அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

'புஷ்பா 2' படத்தின் 19 நிமிட காட்சிகளை நீக்கிய சென்சார் அதிகாரிகள்.. என்ன காரணம்?

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை

மணிப்பூர், வேங்கை வயல், திருமாவளவன்.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, வேங்கை வயல் விவகாரத்தில் மாநில அரசை கண்டித்து, அம்பேத்கர் விழாவுக்கு கூட வர முடியாத நிலையில் திருமாவளவன்

விதியை மதியால் வெல்ல முடியுமா ? யோக குரு பரம் ஸ்ரீ சூரத் என்ன சொல்கிறார்?

விதியை மதியால் வெல்ல முடியுமா ? யோக குரு பரம் ஸ்ரீ சூரத் என்ன சொல்கிறார்?

கர்மா என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

கர்ம நட்சத்திரத்தின் அடிப்படை விளக்கம் உங்கள் வாழ்க்கையில் கர்ம நட்சத்திரம் செய்யும் தாக்கம் நல்வாழ்விற்கான பரிகாரங்கள் மற்றும் வழிகாட்டல்

திரைப்பட விமர்சனத்திற்கு சட்டரீதியான தீர்வு: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை..!

ஒரு புதிய திரைப்படம் வெளியாகி 3 நாட்களுக்குள் விமர்சனம் செய்யக்கூடாது என திரையுலகினர் கூறி வரும் நிலையில் விமர்சனங்களை புறக்கணிப்பது எங்கள் நோக்கம் இல்லை