ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் சசிகுமார் - சிம்ரன்.. ஜோடியாக நடிக்கிறார்களா?

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

ஒரே படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் நிலையில், இந்த படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடித்த 'நந்தன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவருடைய அடுத்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷான் ஜீவிந் இயக்க இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக சிம்ரன் நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா அல்லது இரண்டு முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகிய இருவரும் நடித்திருந்தாலும், இருவரும் இணைந்து நடிக்கும் காட்சி அந்த படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திரைப்படங்களில் கேப்டன் பாடல், போஸ்டர்களை பயன்படுத்தினால்? பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு..!

சமீபத்தில் வெளியான "லப்பர் பந்து" உள்ளிட்ட சில படங்களில் விஜயகாந்த் படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்வி.. ரஜினிகாந்த் கூறிய பதில் என்ன தெரியுமா?

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய பதில் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

துரத்தி கொண்டே வந்த ரசிகர்.. வார்னிங் செய்த பிரியங்கா மோகன்.. என்ன நடந்தது?

நடிகை பிரியங்கா மோகன் தன்னை துரத்திக் கொண்டே வந்த ரசிகரை எச்சரிக்கை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எல்லா விஷயமும் 'புஷ்பா' இயக்குனருக்கு தெரியும: ஜானி மாஸ்டர்

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

'கோட்' முதல் நாள் வசூலை முறியடித்ததா 'தேவாரா? ஒரே நாளில் இத்தனை கோடியா?

ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் ரசிகர்களுக்கு