close
Choose your channels

இந்த உலகத்துல ரெண்டு விதமான மனிதர்கள்.. ஒண்ணு வேட்டையாடுறது இன்னொன்னு இரையாகிறது.. சசிகுமாரின் 'நா நா' டிரைலர்'..!

Saturday, August 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் மற்றும் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடித்த ’நா நா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிரைலரின் ஆரம்ப காட்சியில் ’இங்க நல்லது கெட்டது எதுவுமே இல்ல, நானும் உங்கள மாதிரி தான் நேர்மையாக இருந்தும், உண்மையா பேசி, கஷ்டப்பட்டு உழைச்சா வாழ்க்கையில முன்னேறலாம்னு நினைச்சேன். அதெல்லாம் பணக்காரன் சுத்தி இருக்கிறவங்கள எல்லாம் ஏழையா வச்சுக்குறதுக்கு கண்டுபிடிச்சா வார்த்தை. இந்த உலகத்துல இரண்டு விதமான மனிதர்கள் உண்டு. ஒன்னு வேட்டையாடுவது இன்னொன்னு இரையாகிறது’ என்ற சசிக்குமாரின் வசனத்துடன் கூடிய காட்சிகள் மிரட்டும் வகையில் உள்ளது.

சசிகுமார், சரத்குமார், பாரதிராஜா, சித்ரா சுக்லா, ரேஷ்மா வெங்கடேஷ், பகவதி பெருமாள், டெல்லி கணேஷ், ஹரிப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை நிர்மல் குமார் இயக்கி உள்ளார். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையில், கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில், ஆகாஷ் படத்தொகுப்பில் உருவாக்கிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது

இந்த படம் நிச்சயம் சசிகுமார் மற்றும் சரத்குமாருக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment