சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘ரஜினி முருகன்’ ’சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது சசிகுமார் நடித்து வந்த ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’எம்ஜிஆர் மகன்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கிரீன்சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக மிருணாளினி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் பாடகர் அந்தோணிதாசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் சசிகுமாரின் மற்றொரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
#MGRMAGAN In theatres date @SasikumarDir @ponramVVS @Screensceneoffl @mirnaliniravi @thondankani @anthonyinparty @senthilkumarsmc @sidd_rao @kirankumar_srinivasan @vivekharshan @onlynikil @SonyMusic_South @CtcMediaboy pic.twitter.com/txphavBaXe
— ponram (@ponramVVS) February 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments