சசிகுமார்-ஜோதிகா படத்தின் முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Thursday,November 28 2019]

சசிகுமார் மற்றும் ஜோதிகா இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டு இன்று காலை இந்த படத்தின் பூஜையும் நடைபெற்றது

இன்று நடைபெற்ற பூஜையில் சூர்யா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சசிகுமார், ஜோதிகாவுடன் சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர்

கிராமப்புறப் பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் கதையில் உறவுகள் குறித்து உரக்கச் சொல்லும் விதத்தில் உருவாக்கப்பட இருப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க புதுக்கோட்டை மற்றும் தஞ்சை பகுதியில் உள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைக்க உள்ளார்

More News

எனக்கு இப்போதுதான் காதல் வந்துள்ளது: நித்யாமேனன்

சினிமா மீது தனக்கு இப்போதுதான் காதல் வந்துள்ளதாகவும், பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் காதல் தாமதமாக வருவது போல் தனக்கு சினிமாவின் மீது தாமதமாகவே காதல் வந்துள்ளதாகவும்

உன் தங்கச்சிய தூக்கிட்டு போவோன்: சவால் விட்ட இளைஞரின் துண்டான தலை!

நெல்லையில் 19 வயது வான்மதி என்ற பெண்ணை, நம்பிராஜன் என்ற 23 வயது வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த

ஷாப்பிங் அழைத்து செல்ல மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய காதலி

தன்னுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், அடிக்கடி ஷாப்பிங் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் காதலி வலியுறுத்திய நிலையில் அதற்கு மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம்

30ஆம் தேதிக்கு மேல் 'வச்சு செய்யப்போகுது மழை': தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில் இதெல்லாம் ஒரு மழையே இல்லை, இனிமேல் தான் சென்னைக்கு பலத்த மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கல்லா பெட்டியில் கைவைக்காமல் வெங்காயத்தை மட்டும் திருடிய திருடர்கள்

நகைக் கடைகளில் திருடுபவர்கள் கல்லாப்பெட்டியை கண்டுகொள்ளாமல் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடுவதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.