மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி.. சசிகுமாருக்கு ஒரு சக்சஸ் திரைப்படம் பார்சல்..!

  • IndiaGlitz, [Thursday,May 16 2024]

கடந்த ஆண்டு சசிகுமார் நடித்த சூப்பர் ஹிட் படம் வெளியான நிலையில் அதே பட இயக்குனருடன் மீண்டும் சசிக்குமார் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சசிகுமார் நடிப்பில், மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவான ’அயோத்தி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது என்பதும் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் ஜீ டிவி ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலானோர் இந்த படத்தை பாராட்டினார்கள்.

இந்த நிலையில் ’அயோத்தி’ வெற்றிக்கு பின் இயக்குனர் மந்திரமூர்த்தி அடுத்த படத்தை தொடங்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சசிகுமார் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’அயோத்தி’ போலவே ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை சசிகுமார் - மந்திரமூர்த்தி கூட்டணி கொடுக்கும் என்றும் சசிகுமாருக்கு இன்னொரு வெற்றிப்படம் பார்சல் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.