சஸ்பெண்ட் ஆன போலீஸ் கேரக்டரில் சசிகுமார்!

  • IndiaGlitz, [Thursday,May 30 2019]

நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்று நேற்று அறிவிக்கப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சசிகுமார், சஸ்பெண்ட் ஆன போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் ஜிஎன் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்த படத்தின் திரைக்கதையை எழுதியபோது நான் சசிகுமாரை நினைவில் கொள்ளவில்லை. ஆனால் முழு திரைக்கதையை எழுதி முடித்ததும் இந்த கேரக்டருக்கு சசிகுமார் பொருத்தமாக இருப்பார் என என் மனதில் பட்டது. இதனையடுத்து சசிகுமாரிடம் கதையை கூறியபோது அவர் எனக்கு பாராட்டு தெரிவித்து இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். தொடர்ந்து கிராமத்து கதையில் நடித்து கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இந்த கேரக்டர் நிச்சயம் புதுமையானதாக இருக்கும்.

இந்த படத்தில் குருசோமசுந்தரம் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகி மானசா என்றாலும் அவர் சசிகுமாருக்கு ஜோடி இல்லை. அவரது கேரக்டர் இந்த படத்தில் தனி டிராக்காக இருக்கும்., இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்று இயக்குனர் ஜிஎன் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

More News

தமிழ்நாடு அரசியலில் குதிக்கின்றாரா ஸ்ரீரெட்டி?

தமிழக அரசியல் களம் எப்போதுமே திரை நட்சத்திரங்களை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் என்பது தெரிந்ததே

எனக்கு நேசமணின்னா யாருன்னே தெரியாது: ராதாரவி

உலக அளவில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் 'பிரெண்ட்ஸ்' நேசமணிக்கு பெயிண்டிங் காண்ட்ராக்ட் கொடுத்ததே ராதாரவி என்பதை யாரும் மறந்திருக்க முடியாது

மோடி பதவியேற்பு விழாவுக்கு அஜித்-விஜய் பட நாயகிக்கு அழைப்பு! ஆனால்...

பிரதமர் மோடி பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்னும் சிலமணி நேரங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள அஜித்,

எனது உயிருக்கு ஆபத்து: நடிகை போலீஸ் புகார்

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கலையரசன் மனைவியாக நடித்தவர் மீரா மிதுன். இவர் தமிழ் பெண்களுக்காக ஒரு அழகி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் குறித்து வெளியான பட்டியல்

இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக இன்று மாலை நரேந்திரமோடி பதவியேற்கவுள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்த பட்டியல் குறித்த செய்தி