சூர்யாவுடன் நேருக்கு நேர் மோதும் சசிகுமார்

  • IndiaGlitz, [Wednesday,December 14 2016]

நடிகர்-தயாரிப்பாளர் சசிகுமாரின் அடுத்த படம் பலே வெள்ளையத் தேவா' டிசம்பர் 23, 2016 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை சீசனுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கியிருக்கும் 'பலே வெள்ளையத் தேவா' படத்தில் சசிகுமார் கதாநாயகனாகனாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இந்தப் படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார். இவர்களுடன் கோவை சரளா, சங்கிலி முருகன், ரோஹினி, பாலா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தர்புகா சிவா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவையும் பிரவீண் ஆண்டனி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.
சசிகுமாரின் கம்பெனி பிரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம், இந்த ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகும் நான்காவது படம் ஆகும். இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை' பொங்கல் பண்டிகைக்கும், வெற்றிவேல்' ஏப்ரல் மாதமும், 'கிடாரி' செப்டம்பர் மாதமும் வெளியாகியிருந்தன.
சூர்யா-அனுஷ்கா-ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஹரி இயக்கியிருக்கும் எஸ் 3' படம் இதே டிசம்பர் 23 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றிபெற IndiaGlitzன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

More News

'பைரவா' பாடல்கள் உரிமை யாருக்கு?

வர்தா புயல் பாதிப்புகளிலிருந்து சென்னையும் தமிழகத்தின் இதர பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றன.

சசிகலாவிடம் சரத்குமார் வைத்த கோரிக்கை

அதிமுகவின் மூத்த தலைவர்கள் தாங்கள் சின்னம்மா என்று அன்புடன் அழைக்கும் சசிகலாவை கட்சியின் பொது செயலாளர் பதவியை ஏற்று வழி நடத்தி செல்லவேண்டும் என்று வலியுறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

போயஸ் கார்டனை விட்டு வெளியேறுகிறாரா சசிகலா?

அம்மா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட செல்வி ஜெ ஜெயலலிதா மறைவிற்கு பின் பல சர்ச்சைகள் அவருடைய உடன் பிறவா சகோதரி சசிகலாவை சுற்றிய வண்ணம் இருக்கின்றன.

இரங்கல் கூட்டத்தில் 'அம்மா' பாடல் பாடிய வடிவேலு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை நடிகர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் ஒன்று சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

தல அஜித்துக்காக 7 வருடங்களுக்கு ரீஎண்ட்ரி ஆகும் பிரபல பாடகர்

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.