சசிகலாவின் கோரிக்கையை ஏற்றது இலங்கை அரசு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவை அடுத்து கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தலையீடு இருப்பதாக கூறப்படும் நிலையில் சசிகலாவுக்கு கிடைத்த முதல் அரசியல் அங்கீகாரமாக இலங்கை அதிபரிடம் இருந்து சசிகலாவுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் கச்சத்தீவில் நடைபெறவிருந்த அந்தோனியார் கோயில் திருவிழா டிசம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது அறிந்ததே. இந்த திருவிழாவில் தமிழகத்தில் இருந்து 20 மீனவர்கள் மட்டும் இலங்கை அரசால் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க வந்த இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் அவர்களிடம் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்தார்.
சசிகலாவின் கோரிக்கையை பரிசீலித்த இலங்கை அரசு தற்போது 100 தமிழக மீனவர்களை அனுமதித்துள்ளது. இதுகுறித்து இலங்கை அதிபர் அலுவலகத்தில் இருந்து சசிகலாவுக்கு அதிகாரபூர்வ கடிதமும் வந்துள்ளது. இந்த கடிதம் போயஸ் கார்டன் முகவரிக்கு வந்திருந்தாலும் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர் அந்த கடிதத்தை அவர் போயஸ் இல்லத்தில் சசிகலாவிடம் கொடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments