கருவாடு மீனாகாது… சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்!

  • IndiaGlitz, [Monday,June 07 2021]

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமதி சசிகலா “அதிமுகவை சரிசெய்து விடலாம்” என்பது போன்ற வார்த்தைகளை தனது தொண்டர் ஒருவரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்து இருந்தார். இந்த ஆடியா சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவாரா? அதிமுகவை கைப்பற்றுவாரா? என்பது போன்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கைணப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், “அதிமுகவில் சசிகலா இல்லை. அவர் அமமுகவுடன்தான் பேசி வருகிறார்” என விளக்கம் அளித்து இருந்தார். அதேபோல அதிமுகவின் மூத்த தலைவரான கே.பி.முனுசாமியும் சசிகலா குறித்து கடும் விமர்சனத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள், “சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கும் அவருக்கும் உதவியாளராக இருந்தவர் அவ்வளவுதான். ஆனால் அதிமுகவை அடைவதற்கு அவர் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது. கருவாடு மீனாகாது. அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலாவால் கைப்பற்ற முடியாது” என்றும் ஆவேசமாக கூறி இருக்கிறார்.

விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “சசிகலா என்ன வேஷம் போட்டாலும் என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது. எங்கள் மூத்தவர் காளிமுத்து கருவாடு மீன் ஆகாது என்று தெரிவித்து இருந்தார். இது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த வசனம். கருவாடு கூட மீனாகிவிடலாம். ஆனால் அதிமுகவில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது.

ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் இந்த இயக்கத்தை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு சசிகலா அல்ல ஆயிரம் சசிகலா வந்தாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது” என்று தெரிவித்து இருக்கிறார்.

More News

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்கும் தேதி… வெளியான பரபரப்பு தகவல்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

'தளபதி 65' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் 'தளபதி 65' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்...!விரைவில் விரிவுபடுத்தப்படும்...!

அனைத்து சாதியினரும் கோவில் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள்… எச்சரிக்கும் தமிழக அரசு!

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊழியர்கள் அலட்சியத்தால் கொரோனா நோயாளி பலி....!

கோவை மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் அலட்சியத்தால், கொரோனா நோயாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது