கருவாடு மீனாகாது… சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமதி சசிகலா “அதிமுகவை சரிசெய்து விடலாம்” என்பது போன்ற வார்த்தைகளை தனது தொண்டர் ஒருவரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்து இருந்தார். இந்த ஆடியா சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவாரா? அதிமுகவை கைப்பற்றுவாரா? என்பது போன்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கைணப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், “அதிமுகவில் சசிகலா இல்லை. அவர் அமமுகவுடன்தான் பேசி வருகிறார்” என விளக்கம் அளித்து இருந்தார். அதேபோல அதிமுகவின் மூத்த தலைவரான கே.பி.முனுசாமியும் சசிகலா குறித்து கடும் விமர்சனத்தை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள், “சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கும் அவருக்கும் உதவியாளராக இருந்தவர் அவ்வளவுதான். ஆனால் அதிமுகவை அடைவதற்கு அவர் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது. கருவாடு மீனாகாது. அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலாவால் கைப்பற்ற முடியாது” என்றும் ஆவேசமாக கூறி இருக்கிறார்.
விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “சசிகலா என்ன வேஷம் போட்டாலும் என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது. எங்கள் மூத்தவர் காளிமுத்து கருவாடு மீன் ஆகாது என்று தெரிவித்து இருந்தார். இது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த வசனம். கருவாடு கூட மீனாகிவிடலாம். ஆனால் அதிமுகவில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது.
ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் இந்த இயக்கத்தை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு சசிகலா அல்ல ஆயிரம் சசிகலா வந்தாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது” என்று தெரிவித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com