சிறையில் சசிகலா: ஊதுபத்தி தயாரிக்கும் வேலை. தினசரி சம்பளம் ரூ.50
- IndiaGlitz, [Wednesday,February 15 2017]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய தற்போது சென்று கொண்டிருக்கின்றார். இந்நிலையில் சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவு, மற்றும் பிற வசதிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
பார்ப்பன அக்ராஹர சிறையை பொறுத்த வரையில் காலை உணவு 6.30 மணிக்கும், மதிய உணவு 11.30 மணிக்கும், டீ மாலை 4 மணிக்கும், இரவு உணவு 6.30 மணிக்கும் வழங்கப்படும்.
மேலும் சசிகலாவிற்கு சிறையில் ஊதுபத்தி, மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் ஒரு நாள் சசிகலா வேலை பார்த்தால் அவருக்கு ஊதியமாக ரூ.50 வழங்கப்படும் என்றும் தெரிகிறது. ஞாயிறு கட்டாயமாக வேலை பார்த்தாக வேண்டும் எனவும் சிறை நிர்வாக விதிகளில் உள்ளதால் அவருக்கு விடுமுறை கிடையாது.
மேலும் சசிகலா அடைக்கப்படவுள்ள சிறையில் 2 பெண் கைதிகள் இருப்பார்கள் என்றும், சசிகலாவுக்கு மூன்று புடவைகள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஐபி அந்தஸ்து இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை என்பதால் மேற்கண்ட வழிமுறைகள்தான் சசிகலாவுக்கும் கடைபிடிக்கப்படும் என கூறப்படுகிறது.