சசிகலா முதலமைச்சராக மொட்டை அடித்த அமைச்சர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பேற்று அவரது தலைமையின் கீழ் ஆட்சி நடந்து வரும் நிலையில் தற்போது சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என திடீரென சில குரல்கள் எழுந்துள்ளன.
இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதலுடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் மொட்டையடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பதில் சட்ட சிக்கல் மற்றும் சசிகலா புஷ்பாவின் வழக்கு இருப்பதால் சசிகலாவை முதலமைச்சராக்க அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா முதலமைச்சர் பதவியை ஏற்றால் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவார் என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout