மேல்முறையீடு செய்வோம். தம்பித்துரை

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

சசிகலா உள்பட மூவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்கள் கட்சியினர் புதிய சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழநிச்சாமியை தேர்வு செய்துள்ளதாகவும், அவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா? என சட்ட நிபுணர்கள் கருத்து கூறியபோது, ' இந்த தீர்ப்பை மறுபரீசிலனை செய்யுங்கள் என புதிய ஆதாரங்கள் மூலம் கேட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அந்த மனு தற்போது தீர்ப்பு அளித்துள்ள இரு நீதிபதிகளிடம்தான் செல்லும் என்றும், சுமார் எட்டு மாத காலம் ஆராய்ந்து கொடுத்த தீர்ப்பை இரு நீதிபதிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால் சசிகலா தரப்பில் இருந்து இதுவரை தாகல் செய்யப்படாத வலுவான ஆதாரங்கள் தாக்கல் செய்தால் மட்டுமே பரிசீலனை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

More News

சசிகலா ஆஜராக வேண்டிய நீதிபதி பெயர் அறிவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பை இன்று காலை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் உடனே ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

சசிகலா இதற்கும் பதில் சொல்ல வேண்டும். கவுதமி

சசிகலாவுக்கு தற்போது ஊழல் வழக்கிற்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர் மறைந்த முதல்வர் அம்மாவின் மரணத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து நடிகை கவுதமி கூறியுள்ளார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஒபிஎஸ் நீக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட மூவர் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து சசிகலாவுக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவின் சட்டமன்ற புதிய தலைவர் தேர்வு.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி கடந்த சில மணி நேரங்களாக இருந்து வந்தது.

கூவத்தூர் செல்கிறார் முதல்வர் ஓபிஎஸ்

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்யும் வகையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்துள்ளதை அடுத்து அதிமுக சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.