சசிகலாதான் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக கருத்து தெரிவித்து வந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமே அவர்தான். ஜெயலலிதா மீது மட்டுமின்றி சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்தவர் சுவாமி.

ஆனால் திடீரென தற்போது அவர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுவது அனைவருக்கு ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒருசில நிர்வாகிகள் தவிர அனைவரும் சசிகலாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலாதான் பதவியேற்க வேண்டும் என்று அவர் சற்றுமுன் கூறியுள்ளார்.

சசிகலா பதவியேற்க தாமதமாவது, அரசியல் சட்டத்துக்கு புறம்பாக அமையும் என்றும், தமிழகத்தில் நிலவும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே சசிகலா முதல்வர் ஆன பின்னர் 'பொறுக்கி'களை அடக்க வேண்டும் என்று சுவாமி கருத்து தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.