அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம். சசிகலா நடவடிக்கை
- IndiaGlitz, [Wednesday,February 08 2017]
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று இரவு தனது உள்ளக்குமுறல்களை ஜெயலலிதா நினைவிடத்தில் எழுப்பியது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கட்சியின் தலைமையால் மிரட்டப்பட்டு நிர்ப்பந்தத்தின் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்தேன் என்று அவர் கூறியது தமிழக மக்களை மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ் கூறிய இந்த தகவலை அடுத்து அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் போயஸ் கார்டனில் சசிகலா தலைமையில் கூடினர். முதல்கட்ட நடவடிக்கையாக ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவின் புதிய பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் ஓபிஎஸ் பேட்டி குறித்து கருத்துகூறிய சசிகலா, பன்னீர்செல்வத்தை திமுக பின்னணியில் இருந்து இயக்குவதாகவும், அதிமுக எம்.எம்.ஏக்கள் அனைவரும் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடவுள்ளதாகவும், ஓபிஎஸ் அவர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் நீக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.