ஜெ. நீக்கிய இருவர் மீண்டும் அதிமுகவில். சிறைக்கு செல்லும் முன் சசிகலா அதிரடி

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று தண்டனையை உறுதி செய்த நிலையில் இன்று அவர் பெங்களூரில் சரண் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிறைக்கு செல்லும் முன் அதிரடி நடவடிக்கையாக சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் உறவினர் வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவருடன் அவருடைய அவரது குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார்.
பின்னர் ஒருசில நாட்களில் சசிகலாவை மட்டும் மீண்டும் சேர்த்துக் கொண்ட ஜெயலலிதா சாகும் வரை சசிகலா குடும்பத்தினர்களை அதிமுகவில் சேர்க்கவில்லை.
இந்நிலையில் தான் சிறைக்கு சென்ற பின்னர் கட்சி தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவே நீக்கிய டிடிவி தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷை கட்சியில் மீண்டும் இணைத்துள்ளார் சசிகலா. இது அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து நேரிலும் மன்னிப்பு கடிதம் மூலமும் விளக்கம் அளித்ததால், வெங்கடேஷ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

More News

மீண்டும் நடிப்பில் முழுகவனம் செலுத்தும் பிந்துமாதவி

கழுகு, கேடிபில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2 உள்பட பல படங்களில் நடித்த நடிகை பிந்துமாதவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழிலதிபர்-தயாரிப்பாளர் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்படவும் செய்தது...

அடுத்த கட்டத்தை நோக்கி நயன்தாராவின் 'அறம்'

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படம் 'அறம்'

ஜெயம் ரவி: முடிந்தது 'வனமகன்', மீண்டும் தொடங்கியது 'டிக் டிக் டிக்'

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போகன்' நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் திருப்திகரமாக அமைந்த படமாக இருந்த நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-தீபா சந்திப்பு. திருப்பம் ஏற்படுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தினம் இன்று. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், ஜெயலலிதா மரணம் அடைதுவிட்டதால் அவரது தண்டனை நீக்கப்பட்டு, மீதி மூவருக்கும் பெங்களூர் தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுத

ஓபிஎஸ் இல்லத்தில் தீபா. ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வரும் 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த தினத்தில் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்த நிலையில் சற்று முன்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து தனது ஆதரவை அளித்தார்...