ஜெயலலிதாவின் பதவியை குறிவைத்து காய்நகர்த்தும் சசிகலாபுஷ்பா?
- IndiaGlitz, [Monday,April 09 2018]
நடிகையாக இருந்த ஜெயலலிதா முதன்முதலில் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் கொடுத்த பதவி அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர். அதன்பின்னர்தான் படிப்படியாக அரசியலில் வளர்ச்சியடைந்து பின்னர் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும் முதல்வர் பதவியையும், அவர் கைப்பற்றினார்.
இந்த நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக விரைவில் சசிகலா புஷ்பா நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலாவுக்கு நேரெதிராக செயல்பட்டவர் சசிகலாபுஷ்பா. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான விண்ணப்பம் வாங்க சென்ற சசிகலாவின் கணவர் தாக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சசிகலாபுஷ்பா தற்போது தினகரன் அணியில் தஞ்சமடைந்துள்ளார், அவருக்கு தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை தர தினகரன் சம்மதித்துள்ளதாகவும், அதற்கு முன்னர் அவர் சசிகலாவை சந்தித்துவர ஆலோசனை கூறியுள்ளதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவெ விரைவில் சசிகலா-சசிகலாபுஷ்பா சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.