ஜெ. மரணத்திற்கு காரணமானார்களை விட மாட்டேன். சசிகலாபுஷ்பா சபதம்

  • IndiaGlitz, [Saturday,December 24 2016]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக தொடர்ந்து கூறி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் பிரதமர் மோடியிடமும் விரைவில் இதுகுறித்து மனு கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எம்ஜி.ஆர் நினைவு தினமான இன்று சசிகலா புஷ்பா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, 'அம்மாவின் மறைவுக்கான காரணம் தெரிய வேண்டும். அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை அனைவருக்கும் தெரிய வேண்டும். அதை உச்சநீதிமன்றம் வழியாக நியாயம் பெறாமல் விட மாட்டோம் என்று இன்று புரட்சித் தலைவர் மறைந்த நாளில் அவரது நினைவிடத்தில் சபதம் எடுத்திருக்கிறோம். அம்மா அவர்களின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தி விட்டு இதற்கு காரணமானவர்களை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் என்று அனைவரும் மனதார வேண்டிக் கொண்டோம்” என்று ஆவேசமாக சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

More News

ஓபிஎஸ்-க்கு எம்.ஜி,.ஆர் உறவினர் ஆதரவு.

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி எம்.ஜி.ஆரின் உறவினர்கள் இன்று எம்.ஜி.,ஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகன ராவ் மருத்துவமனையில் திடீர் அனுமதி.

தமிழகத்தின் தலைமைச்செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

ஃபோர்ப்ஸ் நட்சத்திரங்கள் பட்டியல். ரஜினியை முந்தினார் ரஹ்மான்

2016ஆம் ஆண்டு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் உலகின் முன்னணி ஊடகமான ஃபோர்ப்ஸ் (Forbes) இந்தியாவின் 100 முன்னணி நட்சத்திரங்களை பட்டியலிட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு சீனியர் ஆகிறார் பிரபல நடிகர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

என்ன நடக்கப் போகிறது தமிழகத்தில்? துணை ராணுவத்தினர் திடீர் குவிப்பு

சமீபத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.