எனது கணவரை காணவில்லை. சசிகலா புஷ்பா திடுக்கிடும் புகார்

  • IndiaGlitz, [Thursday,December 29 2016]

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சசிகலா தலைமையை ஏற்றுக்கொள்ளவும், அவரது தலைமையின் கீழ் இயங்கவும் முடிவு செய்து இருப்பதாக தீர்மானங்கள் நிறைவேறியது.
இந்நிலையில் நேற்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தாக்கப்பட்ட சசிகலா புஷ்பாவின் கணவர் திடீரென காணவில்லை என சசிகலா புஷ்பா அதிர்ச்சி புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
சற்று முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ''இன்று காலையில் இருந்து எனது கணவரை தேடிக்கொண்டிருக்கிறேன். அதிமுக அலுவலகத்தில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இப்போது வரைக்கும் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இது மனித உரிமை மீறல்' என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே தனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல நடிகை இறந்த மறுநாளே அவரது தாயாரும் மறைந்த சோகம்

ஸ்டார் வார்ஸ் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கேர்ரி ஃபிஷர் நேற்று மரணம் அடைந்தார்...

இன்று ரஜினி-ரஞ்சித் சந்திப்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வசூலை தந்த படமாக இருந்து...

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ...

அதிமுக பொதுக்குழு கூடியது. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா, நோபல் பரிசு வழங்க தீர்மானம்

தமிழக அரசியல் வட்டாரங்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று காலை அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு. முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

பெரும் பரபரப்புக்கு இடையே இன்று காலை சென்னையில் அதிமுக பொதுக்குழு கூடியது.