சசிகலாவின் நெருங்கிய உறவினர் திடீர் மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சசிகலாவின் சகோதரர் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47.
சசிகலாவின் அண்ணன் வினோதகன் மகன் மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்ற போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது போயஸ் தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் வலம் வந்தவர்களில் மகாதேவனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்த மகாதேவன் பின்னர் திடீரென ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு போயஸ் கார்டனில் இருந்தும் கட்சியிலிருந்தும் விரட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாதேவன் மரணம் அடைந்ததை அடுத்து அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சசிகலா ஜெயிலில் இருந்து பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com